வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012,By.Rajah. சிரியாவுக்கு
சொந்தமான பயணிகள் விமானத்தை இடைமறித்து, அதிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்களை
துருக்கி பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரியா இராணுவம் கடந்த 3ஆம் திகதி எல்லையில் நடத்திய துப்பாக்கி சூட்டில்
துருக்கியில் 5 பேர் உயரிழந்தனர். இதற்கு பதிலடியாக துருக்கி பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என துருக்கி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுத தளவாடங்களும் செல்ல விடக்கூடாது என அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியா தலைநகர் டமாஸ்கள் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது. 180 பேர் பயணிக்கக் கூடிய சிரியாவிற்கு சொந்தமான இந்த விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின. இந்த விமானத்திலிருந்த இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது. |
வியாழன், 11 அக்டோபர், 2012
சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது துருக்கி
வியாழன், அக்டோபர் 11, 2012
செய்திகள் காணொளி