Sunday 07 October2012.By.Rajah.உங்கள்உதவிகளைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்! அண்மையில் மேனிக் பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த கேப்பாப்பிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர்வதற்கு என்று அழைத்து வரப்பட்ட போதும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படாது, சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தமக்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், காடுகளுக்குள் தாம் அநாதைகளாக விடப்பட்டுள்ளோம் என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை இனக்கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் உதவிகளை கோரி வருகின்றனர். அந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளே " எமது உறவுகளுக்கு நாமே கை கொடுப்போம் " என்று உங்கள் உதவியை இம்மக்களுக்கு நேரடியாகவோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாகவோ செய்யுமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றேன்.
இம்மக்கள் யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவர்கள். உங்கள் உதவிகள் இவர்களுக்கு எதிர்கால வாழ்வாதாரத்தை மையமாக வைத்து உங்கள் உதவிகளை மேட்கொள்ளுமாறு அன்பை கேட்டுக்கொள்கின்றேன் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.