By.Rajah.திபெத் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வலியுறுத்தி, 6 புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு போட்டியாக, 22 வயது பஞ்சன் லாமாவை நியமிக்க சீன தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. இந்த பகுதியை விடுவிக்க வேண்டும். சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா தலைமையில் திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும், தங்களுக்குள் ஒரு அரசு அமைத்து செயல் பட்டு வருகின்றனர். இதை அங்கீகரிக்க கோரி சர்வதேச நாடுகளின் ஆதரவை தலாய் லாமா திரட்டி வருகிறார். தற்போது இவர் ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சீனாவின் சிசுவான் மாகாணம் அபா கவுன்டியில் வசித்த 4 புத்த துறவிகள் ஒரே நாளில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று 2 பேர் தீக்குளித்து இறந்தனர். 6 பேர் 24 மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில், சீன கம்யூனிஸ்ட் தலைவர்களின் மாநாடு பீஜிங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அடுத்த அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அத்துடன், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தலாய் லாமாவுக்கு போட்டியாக 22 வயதாகும் பஞ்சன் லாமாவை திபெத் தலைவராக நியமிக்க சீன தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் மேலும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் தர்மசாலாவில் இருந்து செயல்படும் மத்திய திபெத் நிர்வாகக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், Ôசீனாவில் 6 துறவிகள் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளது. சீனாவை கண்டித்து இதுவரை 69 பேர் தீக்குளித்துள்ளனர். அவர்களில் 54 பேர் இறந்துள்ளனர். இப்போது தலாய் லாமாவுக்கு பதிலாக பஞ்சன் லாமா என்பவரை நியமிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது கண்டிக்கத்தக்கதுÕ என்று தெரிவித்துள்ளது.
பெய்ன்கன் எர்டினி என்ற 22 வயதாகும் பஞ்சன் லாமாவை, சீன அரசு தலாய் லாமாவுக்கு போட்டியாக கடந்த ஆண்டு அரசியலுக்கு இழுத்து வந்தது. இவரும் சீன அரசுக்கு ஆதரவாக டிவிக்களில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், சீன தலைவர்களின் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக