siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 10 செப்டம்பர், 2012

குவைத்தில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை





10.09.2012.BY.Rajah.குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை
மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கடந்த 19.08.2012 ஞாயிற்றுக்கிழமை, குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பாபள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன.


அதிகாலை 5:30 மணிக்கே சாரிசாரியாக வரத் தொடங்கிய பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் அளித்து சங்கத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி (பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்) அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம்" என்ற தலைப்பில், ஒவ்வொரு இஸ்லாமியரிடமும் இருக்க வேண்டிய பண்புகள், பிற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெருநாள் அன்று எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் போன்றவற்றை தெளிவான முறையில் அழகு தமிழில் எளிய நடையில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்

சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 7:35 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார்.

தொழுகையைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் "பெருநாள் ஃகுத்பாப் பேருரை" நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ரமழானில் மேற்கொண்ட பயிற்சிகள் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும், நோன்பினால் இறையச்சம் (தக்வா) ஏற்பட்டதா? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்