09.09.2012.BY,Rajah.டோலிவுட்டில் நடிகர் நாகர்ஜூனா நடிக்கும் படங்களில் ஒரு அழகி பாடல் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். |
இவ்வாறு அவர் நடிக்கும் படங்களில் வரும் அழகி பாடலுக்கு ஷார்மிதான் குத்தாட்டம்
போடுவார். இதற்கு முன்பு ‘கிங்' மற்றும் ‘ ரகடா' படத்தில் ஷார்மியுடன் நாகர்ஜூனா குத்தாட்டம் போட்டதில் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தற்பொழுது நாகர்ஜூனா நடித்துக்கொண்டிருக்கும் ‘தமருகம்' படத்திலும் ஒரு அழகி பாடல் உண்டு. அதில் நாகர்ஜூனா உடன் ஆட லட்சுமி ராயை புக் செய்திருந்தனர். ஆனால் எனக்கு லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மியே போதும் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா. தேவி பிரசாத்தின் இசையில் ‘தமருகம்' படத்தின் பாடல்கள் ரகளையாய் வந்திருக்கிறதாம். படத்திற்கான அறிமுகப் பாடல் ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்ஜூனாவிற்கு ஜோடி அனுஷ்கா. அழகி பாடலுக்கு ஷார்மி குத்தாட்டம் போட உள்ளார் |
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
குத்தாட்டம் ஆட ஷார்மியே போதும்: நாகர்ஜூனா
ஞாயிறு, செப்டம்பர் 09, 2012
செய்திகள்