10.09.2012.ByRajah.சுவிஸ்
வங்கிகளில் அதிகாரிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டில் 23 சதவீத சம்பளம் குறைந்தது.
ஆனால் மற்ற தொழில் நிறுவனங்களில் 5 சதவீதம் உயர்ந்தது. இத்தகவலை ஈத்தாஸ் என்ற
நிலையான மேம்பாட்டுக்கான சுவிஸ் அமைப்பு தனக்குக் கிடைத்த புதிய தரவுகளை ஆராய்ந்து
அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள இந்த அமைப்பின் ஆண்டறிக்கை, சம்பளம் நிர்ணயிப்பதை இன்னும் முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது. நோவார்ட்டிஸ் மருந்து நிறுவனத்தின் மேலாண்மைக் குழு கடந்த 2011ம் ஆண்டில் அதிக சம்பளம் பெற்றது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோ ஜிமெனெஸ் 15.7 மில்லியன் சுவிஸ் பிராங்க் சம்பளம் பெறுகிறார். அதன் நிர்வாகக் குழுத் தலைவர் டேனியல் வேசெல்லா 13.5 மில்லியன் சுவிஸ் பிராங்க் பெறுகிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக ரோச் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி செவரின் ஷ்வான் அதிகச் சம்பளம் பெறுகிறார். கிரெடிட் சுவிஸ் வங்கியின் தலைமை நிர்வாகியின் சம்பளம் முந்தைய ஆண்டை விட இப்போது பாதிக்கு மேல் குறைக்கப்பட்டு விட்டது. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மில்லியனுக்கும் அதிகமாக மாதச்சம்பளம் பெறும் நிறுவனத்தலைவர்கள் இருபது பேரின் விபரங்கள் காணப்பட்டன |
திங்கள், 10 செப்டம்பர், 2012
வங்கி அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்தது
திங்கள், செப்டம்பர் 10, 2012
இணைய செய்தி