siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 10 செப்டம்பர், 2012

கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க விருது வென்ற தெ.கொரிய திரைப்படமும் எதிர்ப்பும்

10.09.2012.BY.Rajah.
வேனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில், கோல்டன் லயன் விருதை தென் கொரிய திரைப்படம் Pieta தட்டிச்சென்றுள்ளது.
kim ki-duk என்பவர் இயக்கிய இத்திரைப்படம், கடன் சேகரிக்கும் தொழில் கொண்ட நபர் ஒருவரை, ஒரு பெண்மணி தனது மகன் என சொந்தம் கொண்டாட தொடங்கியதால் வந்த விளைவுகளை பற்றியது. பணம் சுரண்டும் முதலாலித்துவத்திற்கு எதிரானது இத்திரைப்படம் என தெரிவிக்கப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட அதன் இயக்குனர் Kim ki-duk நடுவர் குழுவினருக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் பாடினார். பின்னர் இந்த பாடல் பற்றி கருத்து கூறிய போது, கொரியர்கள் கவலையாக இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும், ஏமாற்றப்பட்டிருப்பதாக உணரும் போதும் பாடும் பாடல் இது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் இந்த பாடலை தான் பாடுவார்கள்' என்றார். சிறந்த நடிகைக்கான விருதை Fille the Void எனும் திரைப்படத்திற்காக Hardas Yaron எனும் நடிகைக்கு வழங்கப்பட்டது. அவரது திரைப்படம் ஒரு தீவிர,பழமைவாத, கட்டுப்பாடான யூத சமூகத்தின் வாழ்க்கையில் மூழ்கும் திரைக்கதையை கொண்டது.

சிறந்த நடிகருக்கான விருது The Master எனும் திரைப்படத்தில் நடைத்தமைக்காக Philip Seymour Hoffman மற்றும் Joaquin Phoenix எனும் இருவருக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான சில்வர் லயன் விருதும் கிடைத்தது. Paul Thomas Andersen இயக்கிய இத்திரைப்படம், சமய உட்பிரிவு தலைவர் ஒருவர் தனது பிரிவின் கீழ் ஒரு யுத்த வீரனை கொண்டுவரும் கதைக்களத்தை கொண்டது.

இதேவேளை கோல்டன் லயன் விருது Pieta வுக்கு கிடைக்கப்பெற்றதற்கு எதிர்ப்பும் வலுப்பெற்றிருக்கிறது. இயக்குனர் மைக்கெல் மானை தலைவராக கொண்டு வெனிஸ் ஜூரி குழுமம் செயற்பட்டிருந்தது. இரண்டு விருதுகளுக்கு மேல் ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்பட கூடாது எனும் விதிமுறை வெனிஸ் திரைப்பட விழாவில் கடைப்பிடிக்கப்படுவதால் The Master திரைப்படத்திற்கு கிடைக்க வேண்டிய கோல்டன் லயன் விருது, Pietaவுக்கு சென்று விட்டதாக சில ஹாலிவூட் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

குறிப்பாக இத்தாலியின் பிரபல நாளாநத சஞ்சிகை Corriere della Sera தெரிவிக்கையில் Pieta திரைப்படத்திற்கு விருது கிடைத்தது விவாதிக்கபப்ட வேண்டியது. மனதை புண்படுத்தும் திரைக்கதை கொண்ட இத்திரைப்படத்தில் உண்மையான உயிரோட்டம் இல்லை. இயக்குனர் திரைக்கதை அதன் பாணியில் வளர்வடைவதற்கு விரும்பவில்லை. இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகார தீர்ப்பு நடுவர்களின் குழப்பநிலையை எடுத்து காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா என்ற போதும் 1998 ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலிய ஒரு திரைப்படமும், தங்க விருதை வென்றதில்லை. இம்முறை நிச்சயம் உயர் விருது ஒன்றை பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலிய படைப்பான Dormant Beauty யும் நடுவர் குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

'எப்போதும் உங்களது நாவல்களில் இருந்தே திரைப்படம் எடுக்கிறீர்கள். உங்களது சொந்த வரலாறுகளையே மறுபடி படமாக எடுத்து ஒரு சுய குறிப்புடன் தயாரிக்கிறீர்கள். உங்கள் திரைப்படங்களை நீங்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்' என வெனிஸ் நடுவர் குழுவின் அங்கத்துவர் ஒருவர் இத்திரைப்படம் பற்றி விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள அத்திரைப்படத்தின் இயக்குனர் Marco Bellocchio, 'நடுவர் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நாங்கள் எப்படி படம் எடுக்க வேண்டும் என நீங்கள் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை' என்றார்.

தங்க விருது வென்ற பியெட்டா திரைப்படம். 78,000 யூரோக்களை மட்டுமே கொண்டு குறைந்த பட்ஜெட்டில் உருவான படமாகும். பணம் சம்பாதிப்பது எனது நோக்கம் அல்ல. காலத்திற்கு காலம் ஏற்றவகையில் உலகின் வெப்பதட்பத்தை கொண்டு செல்வதே எனது இலக்கு என இத்திரைப்பட இயக்குனர் கிம் தெரிவித்திருந்தார்