siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஜேர்மனிய நிறுவனத்தின் சாதனங்களைக் 'கொப்பி' செய்த அப்பிள்:

 

 

10.09.2012.By Rajah.
இணையத்தில் அம்பலமாகிய புகைப்படங்கள்   எந்தவொரு பொருளாக இருந்தாலும் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் தோற்றமாகும் .அப்பிள் சாதனங்களுக்கு இக்கூற்று நன்றாகவே பொருந்தும்.


அப்பிளின் சாதனங்கள் சந்தையில் வெற்றியடைந்தமைக்கும், அதற்கென தனியானதொரு கூட்டம் உருவாகியமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அவற்றின் தயாரிப்புகளின் வடிவமாகும்.


அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள், தரம் என்வற்றுக்கு அப்பால் அப்பிள் சாதனங்களின் வடிவமே தனித்துவமானது தான். உதாரணமாக முதலாவது' வின்டோஸ்' கணனி சற்றென்று உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இல்லை முதலாவது 'மெக்' ஞாபகத்துக்கு வருகின்றதா?


நிச்சயமாக பலரின் விடை 'மெக்' ஆகத்தான் இருக்கும். இதுவே அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் வடிவங்கள் எம்மைக் கவர்ந்தமைக்கான சான்றாகும்.


ஆனால் அப்பிள் நிறுவனத்தின் சில சாதனங்களின் வடிவமானது ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த பிரோன் நிறுவனத்தின் தயாரிப்புகளின் வடிவத்தினை ஒத்துக் காணப்படுவதாகத் தெரிகின்றது.






பிரோன் நிறுவனத்தினால் 1950 மற்றும் 1960 களில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை ஒத்ததாகவே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள சில புகைப்படங்களைப் பார்க்கும்போது அப்பிள் நிறுவனத்தினாலேயே மறுக்க முடியாத அளவுக்கு இரண்டு நிறுவனங்களின் சாதனங்களும் வடிவத்தில் ஒத்துப்போகின்றன.


அப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அந் நிறுவனத்தின் தொழில்துறை வடிவமைப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஜொனதன் ஐவ் ஆகியோர் பிரோன் நிறுவன தயாரிப்பு வடிவங்களின் பாதிப்பில் தமது சாதனங்களைத் தயாரித்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.






அப்பிளின் 2001 வெளியாகிய 'ஐ பொட்'டானது 1958 ஆம் ஆண்டு வெளியாகிய பிரோனின் 'டி3 பொக்கட் ரேடியோ'வின் வடிவத்தினை ஒத்துக்காணப்படுகின்றது.


அப்பிள் நிறுவனத்தின் தொழில்துறை வடிவமைப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவரான ஜொனதன் ஐவ் தனது வடிவமைப்புகளில் பிரோன் நிறுவனத்தின் பிரதான வடிமைப்பாளராகத் திகழ்ந்த டயர்டர் ரம்சின் தாக்கம் இருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




செம்சுங் நிறுவனம் மீது காப்புரிமை விதிகளை மீறியதாகக் கூறி வழக்குத்தொடுத்தும், குற்றஞ்சாட்டியும் வரும் அப்பிள் மற்றைய நிறுவனங்களின் வடிவத்தினை சத்தமின்றி 'கொப்பி' செய்வதனை என்னவென்று கூறுவது?