அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2009 ஜனவரி முதல் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு மந்திரி ஆக உள்ளார். தற்போது, உடல் நிலையை கருத்தில் கொண்டு ஒபாமாவின் மந்திரி சபையில் மீண்டும் தொடர மறுத்துவிட்டார்.
எனவே, அடுத்த வெளியுறவு மந்திரியாக ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் திடீரென மயங்கி விழுந்தார். வயிற்று வலி காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் மயங்கி விழுந்தபோது உடலில் அடிபட்டு ரத்தம் உறைந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் நியூயார்க்கில் உள்ள பிரஸ்பிடேரியன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் தனது பணிகளை கவனிப்பார் என அவரது செய்து தொடர்பாளர் பிலிப் ரீயின்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி பதவியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன் 112 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பதவியில் இருந்தபோது அதிக உலக நாடுகளுக்கு சென்று வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி என பெருமையை இவர் பெற்றுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக