siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டினால் ஈழத்துக் கடலக மக்கள் சுதந்திரமான கடற்றொழில் செய்வதற்கு வழிவகை பிறக்குமா?;

10.08.2012.
 வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
news
ஈழத்தமிழர் ஆதரவு மாநாடான டெசோ மாநாட்டில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழிலினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படுமா? என வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
அவ்விடயம் தொடர்பிவ் வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1985ம் ஆண்டு வைகாசித் திங்கள் 12ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட “தமிழீழ ஆதரவாளர் அமைப்பு” (டெசோ) இன்றுடன் 27
வருடங்கள் ஆன போதிலும் ஈழத்தமிழனுக்கு எந்த வகையில் எதைச் செய்தது?

வன்னி மண்ணிலே கொத்துக் குண்டினால் குலை குலையாக தலை சாய்ந்த எம்மினத்தவர் எத்தனை?. எத்தனை?. கிபிர் போட்ட குண்டுகளினால் சிதறி சின்னாபின்னமாகி மாண்டு போன எம்மினத்தவர் எத்தனை? எத்தனை? தாய் தந்தையரை இழந்த அநாதைச் சிறுவர்கள் எம்மாத்திரம்?. குணவனை அழந்து நிர்க்கதிக்குள்ளாகி வாழ வழி தெரியாத விதவைப் பெண்கள் எத்தனை? எத்தனை? ஈழத் தமிழினம் இந்த அவலங்களை அனுபவித்த போது இந்த டொசோ அமைப்பு என்ன செய்தது?. இபடபோது என்ன அவசியம் ஏற்பட்டது மாநாடு நடத்துவதற்கு?.

ஈழத்தமிழனின் வாழ்வையும் சாவையும் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் தத்தமது சுயலாபத்திற்கும் வழமான வாழ்விற்கும் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஈழத்தமிழினத்திற்கு விடிவு எப்படி ஏற்படும்?.

கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போர் அனர்த்தங்களால் எம்மவர்கள் அனுபவித்தவை சொற்களில் வடிக்க முடியாத கொடுமைகள். என்ன செய்வது. தமிழனின் தலைவிதி என்றே கூறிவிடுவோம்.
போர் ஓய்ந்த பின் மீண்டும் நாம் இழந்த சொத்தைக் கடல் தாயின் மடியிலிருந்து மீண்டும் மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடல் மீது சென்றால் இந்திய இழுவைப் படகுகளின் நடவடிக்கைகள், அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக தொழில் செய்ய முடியாத அவலம்.

இந்நிலை தொடர்பாக உயர்மட்டத்திலான அதிகாரிகளிடம் எத்தனை மனுக்கள் கொடுத்தோம். தொடர்பாடல் பலதடவை
மேற்கொண்டோம். முடிவுகள் சாதகமாக ஏற்படவில்லை.

இதன்பின் ஈழத்தமிழ் மீனவர்குழு நேரடியாக தமிழ் நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டு தமிழ் நாட்டின் கரையோர
எமது உறவுகளான மீனவர்களை சந்தித்து எம்மவர்களின் நிலைமையை, கடந்த போர் அனுபவங்களையெல்லாம் பரஸ்பரம் வெளிப்படுத்தினோம். இதன் பின்னவராவது எம்மவர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என நம்பினோம். ஓன்றுமே நடைபெறவில்லை.

இந்த நிலையில் இது விடயமாக இந்திய இரசு மௌனம் காத்தது ஏன்? தமிழ்நாடு அரசு கூட பாராமுகமாக இருந்துவிட்டது. ஏன்? அப்போதும் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர்தான் இருந்தார்.
இழுவைப்படகு தொழில் நடைமுறைகளால் எம்மவர்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் சொல்லிமாளாது. இழுவைப் படகுகளின் நடவடிக்கைகளால் வலைகளை இழந்த மீனவர்கள் இன்றும் கூட தொழில் செய்ய முடியாத அவல வாழ்வு வாழ்கிறார்களே!. இவை அனைத்தும் அரசியல்வாதிகளுக்குத் தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றதே.
அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளும் எண்ணம் அரசுகளுக்கு சற்றேனும் இல்லை. இந்த நிலையில் கூட்டப்படும் டெசோ மாநாடு கடற்றொழில் மக்களின் அவல வாழ்வு நீங்க நடவடிக்கை எடுக்குமா?.

ஈழத்தமிழர்களின் கடற்றொழில் நடைமுறைக்குப் புரண பாதுகாப்பு வழங்கி கடல் வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்குமா?. டெசோ மாநாடு ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு ஆவண செய்யும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

0 comments:

கருத்துரையிடுக