siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

தமிழ் மொழியையும் தமிழ்க் கல்வியையும் காப்பாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் அவசியமானது: தொல் திருமாளவன்

 
06.09.2012.BYrajhh.
உலகெங்கும் பலநாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் பணிகளை பல ஆற்றிவருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த தமிழ்க கல்வி மாநாட்டிலே நான் பங்கு பற்றுவதில் பெருமையடைகின்றேன்.
இந்த மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்றெல்லாம் எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனாலும் நாங்கள் ஒரு விடயத்தை மட்டும் மறந்து விடக்கூடாது.
நமது கல்வியாக இருந்தாலும், கலை இலக்கிய முயற்சிகளாக இருந்தாலும்,விளையாட்டாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக நமது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் நமது நாளாந்து அனைத்து விடயங்களிலும் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒரு அம்சம் அரசியல் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு நாங்கள் நோக்குகையில் எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் இருந்தால்தான் நாம் நமது மொழியையோ அல்லது கல்வியையோ பாதுகாக்கலாம். எனவே இன்று சென்னையில் நடைபெறுகின்ற இந்த தமிழ்க்கல்வி மாநாட்டில் நாம், நமது மொழியையும் கல்வியையும் காப்பாற்றுவதற்கு அரசியல் அவசியம் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினறுமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த உலகத் தமிழ்க் கல்வி மாநாடு கடந்த 25ம், 26ம் திகதிகளில் சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
முதல் நாள் மாநாடு சென்னை முதுநிலை வழக்கறிஞர் இரா. காந்தி தலைமையில் நடைபெற்றது. விழாக்குழுவின் செயலாளர் இரா மதிவாணன் வரவேற்புரை நிகழ்த்த மாநாட்டின் நோக்கவுரையை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்வித்துறைப் பொறுப்பாளர் வி.சு.துரைராசா ஆற்றினார்.
அங்கு தொடர்ந்து தொல் திருமாவளவன் உரையாற்றுகையில்,
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பல சர்வதேச மாநாடுகளின் நான் பங்குபற்றியிருக்கின்றேன். மலேசியா, தென்னாபிரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் இயக்கம் ஏற்பாடு செய்த மேற்படி மாநாடுகளில் இயக்கத்தின் நோக்கம் பற்றி நான் நன்கு தெரிந்து கொண்டேன். இந்த பண்பாட்டு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
அவர்கள் நடத்துகின்ற இந்த கல்வி மாநாடும் நல்ல நோக்கங்களை கொண்டதாகவே உள்ளது என்பதை நான் உணர்கின்றேன். தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் வாழும் பல தமிழ் அறிஞர்களும் பேராசிரியர்களும் மாநாட்டுக் குழுவில் பங்கேற்றி உள்ளதை நான் பார்க்கின்றபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும், சென்னையில் இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தலைநகரில், அதுவும் தமிழ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மண்ணில் மாநாடு நடைபெறுவது என்பது மிகவும் அவசியம் என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில் வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களின் தமிழ்க் கல்விக்கு கைகொடுக்கக் கூடிய தகைமை தமிழக அரசிற்கே உண்டு என்பதை நான் நம்புகின்றேன்.
மேற்படி மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மாநாட்டில் உரையாற்றுகையில்,
“உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்துகின்ற தமிழ்க் கல்வி மாநாட்டின் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும் நமது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் பலன்தரும் வகையிலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.
தமிழர்களின் இருப்பை அழித்து நமது தாயகத்தில் தமிழர்களின் பலத்தை பல்வேறு வழிகளில் நசுக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசாங்கம் பல்வேறு பாதகமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற இந்த நேரத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள பல தமிழ் அறிஞர்களி;ன் துணையோடு ஏற்பாடு செய்யப்பட்டள்ள இந்த மாநாடு தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் மிக அவசியம் மிக்க ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் பல்வேறு வழிகளின் பாதிக்கப்பட்டவர்களாக உலகின் கண்களுக்கு தெரிந்தும் எமது மக்களின் துயரத்தை துடைப்பதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அபிவிருத்தி என்ற போர்வையில் நமது மக்களின் சொத்துக்களும் அபகரிக்கப்படுகின்றன. தங்கள் வாழ்வு அழிக்கப்படுகின்றது என்பதை நன்கு உணர்ந்து கொண்டாலும் நமது மக்கள் உணர்ந்து கொண்டாலும் தமது கல்விச் செல்வத்தை இழந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்கள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நடத்தப்படுகின்ற இந்த தமிழ்க் கல்வி மாநாடு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகி;ன்றது.
சென்னை மாநகரில் உள்ள முன்னணி மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டுக்கு தமிழ் நாட்டு மக்களதும் இங்கு வாழுகின்ற தமிழ் அறிஞர்களதும் ஆதரவு இருக்கின்றது என்பதை இ;ந்த மண்டபத்தில் நான் காண்கின்றேன்.
எமது மக்கள் தமிழுக்காக தங்கள் உயிர்களைக் கொடுத்துள்ளார்கள். இலட்சக் கணக்கான நமது மக்களும் போராளிகளும் தமிழ் மொழிக்காகவும் நமது அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் தங்கள் வாழ்வை இழந்துள்ளார்கள். இவ்வாறு பல இடையூறுகளின் மத்திpயில் வாழ்ந்து வரும் நமது மக்கள் இன்னும் தமிழ்க் கல்விக்கு மரியாதை செலுத்தி வருகின்றார்கள்.” என்றார்.
முதலாம் நாள் மாநாட்டை சென்னை எஸ். ஆர். எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பொன். வைக்கோ தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில்,
உலகில் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு சென்னையில் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் இயங்கிவரும் முன்னணி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்ற வகையில் நான் பெருமையடைகின்றேன்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தி;ன் முக்கிய உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களின் ஒத்துழைப்போடு நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் தமிழ்க் கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்க் கல்வி தொடர்பான பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மேற்படி கட்டுரைகளை எழுதிய அறிஞர்களும் அங்கு கலந்து கொண்டு தங்கள் ஆக்கங்களை அங்க கூடியிருந்த மக்களுக்கு சமர்ப்பித்தார்கள்.
மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொண்ட தமிழ் நாடு எம்ஜிஆர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் து. ராஜா மற்றும் முன்னார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஒளவை நடராஜன் ஆகியோர் பலனுள்ள பல கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
மேற்படி இரண்டு நாள் மாநாட்டில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் வேல் வேலுப்பிள்ளை, செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் மற்றும் இயக்கத்தின் காப்பாளர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம், மலேசியாக் கிளைத் தலைவர் ப. கு. சண்முகம், தென்னாபிரிக்கா கிளையின் தலைவர் மிக்கிச் செட்டி, சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் ஆர். என்.லோகேந்திரலிங்கம், பிரான்சு கிளையின் தலைவர் விசு செல்வராசா, நோர்வே கிளையின் முக்கிய செயற்பாட்டாளர் சு. தியாகலிங்கம், மொரிசியஸ் நாட்டின் கிளைத் தலைவர் வேல் கோவிந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.