siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 29 நவம்பர், 2012

கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்தது

சிரியாவில் இரு கார் வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 54 பேர் பலியாயினர், 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக புரட்சிபடையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஜராமனா நகரில் கிறிஸ்தவ ட்ரூஸ் இன சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு 2 கார் வெடிகுண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென வெடித்ததில் அப்பகுதியில் இருந்த 20 பேர் பலியாயினர்.
குறுகலான சாலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களின் மீது விழுந்ததாகவும், எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் இடிபாடுகளுக்கு இடையே சிதறி கிடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்ததாக முதலில் கூறிய சிரியா மனித உரிமைகள் அமைப்பு, பின்னர் 54 பேர் இறந்ததை உறுதி செய்தது, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜராமனாவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4 முறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.{காணொளி, புகைப்படங்கள்}







0 comments:

கருத்துரையிடுக