siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 27 நவம்பர், 2012

பெண் வீராங்கனைகள் மீது பாலியல் தாக்குதல்: அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலிய இராணுவத்தில் இளம் இராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டதற்கு அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அரசின் சார்பில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
அவர் கூறுகையில், இராணுவத்தில் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் சக இராணுவத்தினரால் பாலியல் ரீதியாகவோ அல்லது உடல் மற்றும் மன ரீதியாகவோ துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால் அதற்காக அரசு சார்பில் வருத்தம் தெரிவிக்கின்றேன் என்றார்.
மேலும் இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகளை உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு தலா 52 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லென் ராபர்ட் ஸ்மித் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இத்தகவலை தி ஆஸ்திரேலியன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக