siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 23 நவம்பர், 2012

எமக்கு இப்போது அரசியல் தீர்வு ஒன்றுதான் தேவை !


         
 
கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவின் ""சைக்கிள் புதைகுழிகளுக்குள்'' கிடந்து வெயிலிலும் மழையிலும் நனைந்து அந்தச் சைக்கிள்களின் டயர்கள் உருகி உருத்தெரியாமல் போய்விட்டன.
வலிகாமத்தில் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில்தான் பவலோஜினியின் வீடு இருக்கிறது. அங்கிருந்து வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் ரவிக்குமார் 95 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சைக்கிள் புதைகுழிக்குப் போய் வருகிறார்.
2009, போரின் இறுதிக் கட்டத்தில் முல்லைத்தீவின் மிக ஒடுங்கிய நிலப்பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் விடுதலைப் புலிகளும் தள்ளிச் செல்லப்பட்ட பின்னர் அவர்களால் கைவிடப்பட்ட ஒவ்வொரு துண்டு இரும்பையும் சேகரிப்பதற்காகவே ரவிக்குமார் அங்கு சென்று வருகிறார் என்கிறார் பவலோஜினி.
போரின் போது நடத்தப்பட்ட கடும் எறிகணை வீச்சுக்களால் சிதைந்து குப்பையாகிப் போன பஸ்கள், கார்கள், வான்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வீதியோரங்களில் இன்னும் அப்படியே கிடக்கின்றன. ரவிக்குமாரைப் போன்ற இரும்பு சேகரிப்பவர்கள் அவற்றுக்குள் சிறப்பானவையான சைக்கிள்கள் போன்றவற்றை வேட்டையாடி விற்பதற்காக வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.
பவலோஜினியின் வீட்டு முற்றத்தில் குவிந்து கிடக்கும் சைக்கிள் மலையின் நிழலில் நாம் இருந்து பேசிக் கொண்டிருக்கையில், இந்தச் சைக்கிள்களை கிலோ 49 ரூபா படி வாங்குவதற்கு முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்கிறார் பவலோஜினி. இவற்றை நாமே கொழும்புக்கு எடுத்துச் சென்றால் பழைய இரும்புச் சந்தையில் கிலோ 65 ரூபா வரைக்கும்கூட விற்கக்கூடியதாக இருக்கும். ஆனால் போக்குவரத்துச் செலவைப் பற்றித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் மேலும் சொல்கிறார்.
கோணப்புலம் முகாமில் இருக்கும் ஏனைய பலரும்கூட இதே தொழிலில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், தனது அயல் வீட்டுக் குழந்தைகளுக்குத் தானே உணவூட்டினார் என்கிறார் பவலோஜினி. அவர்களின் பெற்றோர்கள் பழைய இரும்பு தேடி புதைகுழிக்குப் போன நிலையில் இரண்டு நாள்களாகத் திரும்பி வராமையே அதற்குக் காரணம்.
முல்லைத்தீவில் குவிந்து கிடக்கும் இந்தப் பழைய இரும்புக் குவியல்கள், போர் எவ்வளவு கொடூரமாக நிறைவுக்கு வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்ல, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்த போர் மற்றும் முரண்பாடுகளில் இருந்து வெளியேவர யாழ்ப்பாண மக்கள் எவ்வளவு தூரம், கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிக்கல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
போருக்குக்குப் பின்னரான யாழ்ப்பாணம், அது முன்னர் இருந்த மாதிரியிலிருந்து மிக வித்தியாசமானதாக இருக்கிறது. இரவு நேரத்தைப் போர்த்தியிருந்த இருளும் பயமும் இப்போது அங்கில்லை, சோதனை நிலையங்களில் நின்றபடி டோர்ச்சு வெளிச்சத்தைப் பீச்சியடித்து வீதியை மறிக்கும் சிப்பாய்கள் இல்லை, பெரும் வெடிச் சத்தத்துடன் விழுந்து வெடிப்பதற்கு முன்னர் தலைக்கு மேலாகக் கூவிக் கொண்டு செல்லும் எறிகணைகளும் இப்போது இல்லை.
இப்போது சோதனைச் சாவடிகள் இல்லை. ஒப்பீட்டளவில் இராணுவத்தினரின் பிரசன்னமும் குறைந்துவிட்டது. இரவு வேளைகளிலும் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லா நேரங்களிலும் மக்கள் வீதிகளில் நடமாடுகிறார்கள். வீதிகளை நிறைத்திருந்த சைக்கிள்கள் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மண்ணெண்ணெயில் ஓடிய மொறிஸ் மைனர் கார்கள் என்பன எல்லாம் மறைந்து இப்போது வீதிகளை இயல்பான வாகனங்கள் நிறைத்துள்ளன.
இந்த மாற்றங்களுக்குள் ஒன்றாகத் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு முன்பாக (தபால் தலைமையகத்தின் அருகில்) பெரிய உல்லாச விடுதி ஒன்று முளைத்துள்ளது. அதன் உரிமையாளர் திலக் தியாகராஜா, இன்று யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய தனியார் முதலீட்டாளர். தியாகராஜா யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய போது அவருக்கு வயது 17. ஐக்கிய இராச்சியத்தில் அவர் இப்போது வாழ்கிறார்.
42 அறைகளைக் கொண்ட அவரது விடுதியான டில்கோ தியாகராஜா மற்றும் அவரது மனைவியான கோகிலா ஆகியோரின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களைச் சேர்த்ததே டில்கோ என்ற பெயர் இப்போது எதிர்பார்ப் பின் குறியீடாக நின்று கொண்டிருக்கிறது. குறைந்தது தியாகராஜா சொல்வதைப் போன்று யாழ்ப்பாண மக்கள் இழந்துவிட்ட பெருமைகளை மீட்டு எடுக்கும் எதிர்பார்ப்பின் குறியீடாகியிருக்கிறது.
அமைதியை அடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வேலைகளை உருவாக்குவதும் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதும்தான் என்கிறார் 56 வயதான விடுதி உரிமையாளர். அவர் லண்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மாறி மாறி தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அங்கே, லண்டனுக்கு வெளியே அவரது வீடான சிங்வெல்லில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது மனைவி இரு பிள்ளைகளும் அங்கேயே இருக்கிறார்கள்.
அவரை வெளிநாட்டுக்கு ஓடவைத்த 1970களின் இலங்கையின் நிலைமையை நினைவுபடுத்திப் பார்க்கையில். தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது நோக்கம் என்கிறார் அவர்.

0 comments:

கருத்துரையிடுக