siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 30 நவம்பர், 2012

ஆசிட் ஊற்றி முகத்தை சிதைத்த கணவன்: வங்கதேச பெண்ணின் சோக கதை

வங்கதேசத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்த கணவனுடன் மறுபடியும் குடும்பம் நடத்தும் வேதனைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர். வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18 வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார்.
இதில் நூர்பானுவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. பார்வை நரம்புகள் சேதமடைந்ததால் பார்வை பறிபோனது. முகமும் அகோரமாகிப் போனது. இந்த நிலையில் நூர்பானுவுக்கு விவாகரத்து கிடைத்தது.
மனைவி மீது ஆசிட் ஊற்றிய பின்னர் 10 மாதம் தலைமறைவாக இருந்து வந்த நூர்பானுவின் கணவரை, பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடம் சிறையில் இருந்த அவரை அவரது தாயார் ஜாமீனில் வெளியே அழைத்து வந்தார்.
அதன் பிறகு நூர்பானு, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரது மாமியார் மிரட்டியும், வற்புறுத்தியும், வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்.
இதனால் மறுபடியும் நரகத்திற்குத் தள்ளப்பட்ட நூர்பானு, தற்போது மறுபடியும் அதே அடி உதையுடன் கஷ்டத்தில் சிக்கியுள்ளாராம்.
இவரது நிலை குறித்து விஎஸ்ஓ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆவணப் படமாக தயாரித்துள்ளது.{புகைப்படங்கள்,}

0 comments:

கருத்துரையிடுக