தலிபான்களின் தாக்குதலுக்குள்ளாகி
பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலாலாவுக்கு அந்நாட்டிலேயே
நிரந்தரமாக தங்க வீடு ஒதுக்கப்பட இருக்கிறது.
கடந்த ஒக்ரோபர் 9ம் திகதி தலிபானியர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான
மலாலாவுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் மலாலாவின் பெற்றோரும் அவரது சகோதரர்களும் பிரித்தானியா சென்றனர். இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை வரை போய் மலாலா சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கடைபிடிப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, மலாலாவின் தந்தைக்கு பிரித்தானியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பதால் பிர்மிங்ஹாமில் வீடும், வாகன வசதியும் வழங்கப்படுகிறது. மலாலாவின் உடலில் இருக்கும் குண்டு அகற்றப்பட்ட பின்பு இந்த வீட்டில்தான் அவர்கள் வசிக்க இருக்கிறார். பாகிஸ்தான் அரசின் இந்நடவடிக்கையை பிரித்தானியா எம்.பி. காலித் மஹ்மூத் வரவேற்றுள்ளார் |
ஞாயிறு, 25 நவம்பர், 2012
மலாலாவுக்கு பிரித்தானியாவில் வீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக