siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 5 நவம்பர், 2020

நடந்த திடீர்த் திருப்பம்..ஒட்டுமொத்தமாக கலைந்து போனஅதிபர் ட்ரம்ப் கனவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை வகித்த சில மாகாணங்களில் கடைசி கட்டத்தில் பிடன் அதிரடியாக வெற்றிபெற்றார். இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்ப் கடும் விரக்தியில் இருக்கிறார்.
இந்த தேர்தலில் தொடக்கத்தில் டிரம்ப் முன்னிலை வகிப்பது 
போல இருந்தது. குடியரசு கட்சிக்கு ஆதரவான 
மாகாணங்களில் வென்ற டிரம்ப்.. ஜனநாயக கட்சிக்கு ஆதரவான தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வந்தார்.அதிலும் டெக்சாஸ் மாகாணத்தில் 38, புளோரிடாவில் 29 இடங்களை மொத்தமாக 
டிரம்ப் அள்ளினார். பல இழுபறி மாகாணங்களில் டிரம்ப்தான் முன்னிலை வகித்தார்.இந்த நிலையில்தான் இரவோடு இரவாக டிரம்ப் முன்னிலை வகித்த இடங்களில் எல்லாம் பிடன் வென்று
 இருக்கிறார். டிரம்ப் தொடக்கத்தில் முன்னிலை வகித்த விஸ்கான்சிஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பிடன் வென்றுள்ளார்.
ந்த திடீர் திருப்பம் ஏற்படுவதற்கு காரணம்.. தபால் வாக்குகள். விஸ்கான்சிஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் முதலில் டிரம்ப்தான் முன்னிலை வகித்தார். ஆனால் போக போக தபால் வாக்குகளில் பிடன்
 முன்னிலை வகிக்க தொடங்கினார். அதிலும் விஸ்கான்சிஸ் மாகாணத்தில் வெறும் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிடன் வெற்றிபெற்றார்.
இன்னொரு பக்கம் மிச்சிகன் தொகுதியில் 1
 லட்சம் தபால் வாக்குகளால்.. பிடன் திடீரென வெற்றிபெற்றார். பிடன் தொடக்கத்தில் இங்கு 45 வாக்குகளில் பின்னடைவை 
சந்தித்து இருந்தார். ஆனால் கடைசியில் வந்த தபால் வாக்கு 
எண்ணிக்கை தேர்தல் முடிவை இரவோடு இரவாக புரட்டி போட்டது. இதுதான் டிரம்ப் தற்போது கோபம் அடைய காரணம்.பறிபோகிறது.இதைதான்.. என்னுடைய வாக்குகள், வெற்றி எல்லாமே காணாமல் போகிறது என்று டிரம்ப் கூறியுள்ளார். வெற்றிக்கு அருகில் வந்து
 தோல்வி அடைவதால், டிரம்ப் விரக்தியில் இருக்கிறார். தபால் வாக்குகள்தான் இந்த தேர்தலில் கேம் சேஞ்சராக உள்ளது. இதனால்தான் மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று டிரம்ப் கோரிக்கை வைத்து வருகிறார்.
அதேபோல் இன்னொரு பக்கம் பென்சில்வேனியா,
 ஜார்ஜியா போன்ற மாகாணங்களில் இன்னும் முடிவு
 வரவில்லை. இங்கும் தபால் வாக்குகள்தான் அதிகம் பதிவாகி உள்ளது. இந்த தபால் வாக்குகள்தான் இனி முடிவை 
தீர்மானிக்கும்.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர்தான் அதிகமாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த தபால் டிரம்பிற்கு எதிராக செல்ல வாய்ப்புள்ளது.
இதனால் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி 
அடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் டிரம்ப்.. இந்த வாக்குகளை எண்ணகூடாது என்று கோரிக்கை 
வைத்துள்ளார்.தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள்
 மட்டுமே பெற்றுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>




0 comments:

கருத்துரையிடுக