இலங்கை எதிர்வரும் மாதங்களில் ஓமானில் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பிலான உடன்டிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஓமானுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக நேற்;றைய தினம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் சமர்ப்பித்திருந்த யோசனைக்கு ஒன்றுக்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஈரானிடம் இருந்து இலங்கை பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்கிறது.
ஏற்கனவே ஈரானிடம் இருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்த நிலையில், பின்னர் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மாத்திரம் விதிவிலக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது