siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆசியாவிலேயே அதிவேகமான கடலுக்குக் கீழான தரவுப் பரிமாற்ற இணைப்பு

24-08-2012.
ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது.

7800 கிலோ மீற்றர் நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது.

இந்த இணைப்பின் மூலம் தரவுகள் செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது.

இது சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி செக்கன்கள் வேகமானதாகும்.

கணனிகளால் வியாபாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தரவுப் பரிமாற்றம் மூலம் ஒரு செக்கனிலும் குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான தரவுப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

வங்கிகளுக்கிடையிலான கடும் போட்டி காரணமாக தரவுப் பரிமாற்றத்தில் ஏற்படும் ஒரு செக்கன் தாமதமானது அவற்றின் இலாபத்தின் அளவைப் பாதிப்பனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது