siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

செம்பியன்பற்றில் மக்கள் குடியிருப்புக்கு நடுவில் பாரிய புதிய இராணுவ முகாம்! பிரதேசெம்பியன்பற்றில் மக்கள் குடியிருப்புக்கு நடுவில் பாரிய புதிய இராணுவ முகாம்! பிரதேச மக்கள் அச்சம்ச மக்கள் அச்சம்



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் செம்பியன்பற்று கிராமத்தின் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று கிராமத்தின் நடுப்பகுதியில் புதிதாக இராணுவத்தினர் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.
இந்த படைமுகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் கடற்படையினரின் பாரிய முகாமும், 500 மீற்றர் தூரத்தில் இராணுவ தலைமைப்பீட முகாமும் ஏற்கனவே அமைந்துள்ள நிலையில் இப்பகுதியில் இப்புதிய முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது.
புதிய இராணுவ முகாம் அமைக் கப்பட்டுவரும் பகுதி மக்கள் செறிந்து வாழும் பகுதியாகும்.
இப்பகுதி கடற்றொ ழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பகு தியாகும்.
இந்த நிலையில் அவர்கள் தொழி லுக்குச் செல்லும்போது பெண்களே வீடு களில் தங்கியிருப்பர். இதனால் மக்கள் பல அசெளகரியங்களையே சந்திக்கவேண்டும் ௭ன இப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வ டபகுதியில் தற்போது இராணுவ படை முகா மிற்கு பல நில ஆக்கிரமிப்புக்கள் நடை பெற்று வருகின்றன. இதனை தவிர்க்குமாறு பலரும் பல அமைப்புக்களும் கோரிவரு ம் நிலையில் படையினர் இதைக் காதில் வாங்காது இவ்வாறு செயற்பட்டு வருகி ன் றனர் ௭ன்றும் மக்கள் விசனம் தெரி விக் கி ன்றனர்.
படைமுகாம்கள் அமைப்பதாயின் மக்கள் குடியிருப்பில்லாத, மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் முகாம்களை அமைக்க வேண்டும் ௭ன்பது பலரது கோரிக்கையாகவும் உள்ளது.
இதனை கருத்தில் ௭டுக்காத படையினர் மக்கள் குடியிருப்புக்குள்ளேயே தமது நிலைகளை அமைத்து வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்றுப் பகுதி மக்கள் பல இடர்களைச் சந்தித்துத் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டுவரும் நிலையில் படையினரின் இந் நடவடிக்கை பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது