பிரபல பொப் இசை பாடகி விட்னி ஹுஸ்டன்(வயது 48), சில மாதங்களுக்கு முன்பு மர்மமான
முறையில் மரணமடைந்தார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை அதிகளவு உட்கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சிகாகோ நகரின் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது நடித்து கொண்டிருக்கும் பால் ஹுபுல் என்பவர் இது தொடர்பாக சமீபத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விட்னி ஹுஸ்டன், ரூ. 9 கோடி வரை பாக்கி வைத்திருந்தார். இந்த கடனை வசூலிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். பிவர்லி ஹில்ஸ் ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவருடன் இருந்தது ஹோட்டல் கமெராவில் பதிவாகியுள்ளது. இவர்கள், விட்னி ஹுஸ்டன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அவரை கொன்றிருக்கலாம். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் போராடியிருக்கக்கூடும். இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது உடலில் சில காயங்களும் காணப்பட்டன. என்னிடம் உள்ள ஆதாரங்களை பொலிசாரிடம் நான் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் விரைவில் இதை ஆதாரமாக வைத்து, புதிய கோணத்தில் விட்னி ஹுஸ்டனின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
வெள்ளி, 28 டிசம்பர், 2012
பிரபல பாடகி விட்னி ஹுஸ்டன் கொலை செய்யப்பட்டாரா? திடுக்கிடும் ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக