இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான
மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல்
வெளியாகி உள்ளது.
மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது
என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தினமும் 4 சிறுவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிரலப பத்திரிக்கையான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் 4 மாணவர்களாவது தினமும் கத்தி, சுத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்கள் சிலர் உலோகத்தால் நட்சத்திர வடிவில் தயாரிக்கப்படும் நிஞ்சா ஸ்டார் ஆயுதத்தை கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். மாணவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் 4,150க்கும் அதிகமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் 20க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களின் ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. சில பள்ளிகளில் கோடாரியை கூட மாணவர்கள் கொண்டு வந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
வெள்ளி, 28 டிசம்பர், 2012
கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக