லண்டனில் தற்கொலை செய்து கொண்ட
செவிலியர் ஜெஸிந்தாவின் உடல் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த
மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா. அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர். அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது. இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஜெஸிந்தாவின் உடல், லண்டனிலிருந்து இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கிடையே ஜெஸிந்தா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவல்கள் அம்பலமாகி உள்ளது. முதல் கடிதத்தில், இளவரசி கேத் கர்ப்பமுற்ற நிலையில், மசக்கையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்ததையும், அவுஸ்திரேலிய ரேடியோ தொகுப்பாளர்கள் மெல் கிரேக், மிக்கேல் கிறிஸ்டியன் ஆகியோரின் தொலைபேசி அழைப்பால் தான் ஏமாற்றப்பட்ட வேதனை அனுபவத்தை தெரிவித்துள்ளார். மற்றொரு கடிதத்தில், தான் பணியாற்றி வந்த மருத்துவமனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் பெயரால் வந்த தொலைபேசி அழைப்பை நம்பி ஏமாந்த பின்னர், தன்னை தனது மூத்த அதிகாரிகள் நடத்தியவிதத்தால் ஏற்பட்டுள்ள வேதனையை உருக்கமாக விவரித்துள்ளார். மூன்றாவது கடிதத்தில், தனக்கு இந்தியாவில் உடுப்பி அருகேயுள்ள சுர்வேயில் இறுதிச்சடங்கு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்{காணொளி} |
சனி, 15 டிசம்பர், 2012
தற்கொலைக்கு மருத்துவமனை மூத்த ஊழியர்கள் தான் காரணமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக