இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி வந்தவர்களில் முக்கியமான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சமீபத்தில் ஐந்து யுவதிகளை அழைத்துச் சென்று பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபரால் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதிகள் இவரது பிடியிலிருந்து தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
பொலிஸார் இந்த நபரைக் கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவாகியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இந்நபர் சிங்ப்பூரிலிருந்து இலங்கை வர முயற்சித்தபோது சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக