சுவிட்சர்லாந்து கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் மூன்றரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
இனி இவர்கள் பிடிபட்டால் அங்கேயே நூறு பிராங்க் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை.
சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தல், நுகர்வு போன்ற சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சில மாற்றங்கள் ஒக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் திகதி அன்று நாடாளுமன்றத்தின் மேலவையும், மக்களவையும் அனுமதி அளித்துள்ளன.
பத்து கிராம் அல்லது அதற்கும் குறைவான கஞ்சா வைத்திருப்பவருக்கு இந்த உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் மற்றும் நீதித்துறையினரின் வேலைப்பளு கனிசமாகக் குறைகிறது. மேலும் சுவிட்சர்லாந்தில் மாநிலத்திற்கு, மாநிலம் இச்சட்டங்கள் மாறுபடுகின்றன.
ஃபிரிபோர்க் மாநிலத்தில் 10 கிராம் கனாபீஸ் வைத்திருந்தால் ஐம்பது ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும். அதுவே டிசினோ மாநிலத்தில் மூவாயிரம் ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக