siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நம்மவர்களின் படைப்பில் ஆங்கிலத் திரைப்படம் ‘Trapped in Abyss

<

21.09.2012.By.Rajah.நமது நாட்டைச் சேர்ந்த துடிப்பு மிக்க இளைஞர்கள் கூட்டணி இணைந்து தயாரித்திருக்கும் ஆங்கிலத் திரைப்படமே ‘Trapped in Abyss’.
திகில் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இதன் டிரெயிலர் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியாகவுள்ளது


இத்திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் ஹொலிவூட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் Amber Armstrong நடித்துள்ளார்.
ஸ்ரீநாத் இராமலிங்கம் இத்திரைப்படத்தின் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.. அவரும்  ஷபீர் சின்னலெப்பையும் இணைந்து  இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்கள். கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஸ்ரீநாத் இராமலிங்கம் அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் சம்பந்தமான பட்டப்படிப்பை மேற்கொண்டு, கடந்த 6 வருட காலங்களாக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
21
ஹொலிவூட்டில் திரைப்பட தொகுப்பாளராக தனது திரையுலகப் பணியை ஆரம்பித்த ஸ்ரீநாத், அதன் பின்னர் உதவித் தயாரிப்பாளர், மேடை முகாமையாளர், திரைக்கதை மேற்பார்வையாளர், ஊடக முகாமையாளர், உதவி இயக்குநர் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றி சிறந்த அனுபவத்தைப் பெற்றார்.
இருவருட காலத்துக்குள் இரண்டு ஹொலிவூட் விவரணத் திரைப்படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றும் வாய்ப்பும் ஸ்ரீநாத்துக்குக் கிட்டியது. அதனையடுத்து குறுந்திரைப்படங்கள், இசை வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றை தயாரித்தும் இயக்கியும் வந்த ஸ்ரீநாத் அடுத்த கட்டமாக சுதந்திரத் திரைப்படங்களை இயக்குவதற்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
 ‘Trapped in Abyss’ திரைப்படத்தின் புகைப்பட இயக்குனராக ஷபீர் சின்னலெப்பையும், தொகுப்பாளராக ஹரிஹரனும் பணியாற்றியுள்ளார்கள்.
திரைப்படத்தின் இணைத்தயாரிப்பாளர்கள் கெவின் மரினோ மற்றும் பென்ஸ்டன் அலெக்ஸ் பெர்னாண்டோ இருவரும், திகில் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு
‘Trapped in Abyss’ சிறந்த விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது பிந்திய தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுவரும் இத்திரைப்படத்தின் டிரெயிலர்கள் எதிர்வரும் 25ம் திகதி முதல் You Tube, apple.com உட்பட அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகவுள்ளது.
கடைத்தொகுதியொன்றுக்குள் சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள் குழுவொன்றை, தீய ஆவியொன்று முடிவுப் புள்ளியொன்றுக்குள் தள்ளிவிட முயற்சிக்கிறது. அதிலிருந்து தமது உயிரைக்காப்பாற்றித் தப்பிக்கொள்ள முயலும் அக்குழுவினரின் போராட்டமே திகிலோடு திரைப்படமாக விரிகிறது.