siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பிரிட்டனிலிருந்து திருப்பி அனுப்பப்படவிருந்த பலர் உயர்நீதிமன்றில் கடைசி நேரத்தில் தடையுத்தரவு பெற்றனர்

 
 
 
21.09.2012.Bxy.Rajah.
(2ம் இணைப்பு)
[காணொளி,] பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நேற்று புதன் கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள்.
திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றிய விமானத்தை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை அடுத்தே ஒரு சிலருக்கு மட்டும் இந்தத் தடையுத்தரவு கிடைத்துள்ளது.
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் விமானத்தை முழுமையாகத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மறுத்த நீதிபதி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தஞ்சம் மறுக்கப்பட்டமைக்கான தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதாக தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் தடையுத்தரவு கோரி வழக்குத் தொடர்ந்த சட்ட நிறுவனமொன்றைச் சேர்ந்த வழக்கறிஞர் கீதார்த்தன் குலசேகரன் பிபிசி யிடம் தெரிவித்தார்.
அதன்படி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருந்த 60 பேரில் 25 பேர் மட்டுமே நேற்றைய விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் 8 பேர் முஸ்லிம்கள் எனவும் மற்றையவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர்கள் அரசியல் தஞ்சம் கேட்டவர்கள் அல்லவென்றும் விசா அனுமதியின்றி தங்கியிருந்தவர்கள் என்றும் குலசேகரன் சுட்டிக்காட்டினார்.
திருப்பி அனுப்பப்படாமல் தடுக்கப்பட்டவர்கள் அவர்களின் தஞ்சக்கோரிக்கை மீளாய்வுக்காக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 18 பேர் வரையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி மீண்டும் தப்பித்து பிரிட்டனுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு முறையிட்டுள்ளதாகவும் குலசேகரன் மேலும் கூறினார்.
இதேவேளை, தஞ்சம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக வெளிவரும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
லண்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சென்ற புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள்.
திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றி சென்ற பேரூந்து விமான நிலையத்தை அடையும் குறிகிய நேரத்தில் அவர்களை திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்துவதற்காக அகதிகளுக்கான மனிதநேய அமைப்புகளை சார்ந்த மனிதவுரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினார்கள்.
அவ்வகையில் அகதிகளை ஏற்றி சென்ற பேரூந்துக்கு அடியில் புகுந்து தம்மை அந்த பேரூந்தோடு விலங்கிட்டு பூட்டினார்கள். இச் சம்பவத்தை அடுத்து பல ஊடகவியாளர்கள் மற்றும் காவல்துறை குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்தது.
இச் சந்தர்ப்பத்தை பிரயோகித்து தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் அகதிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான நேரம் பெரிய அரிதாக கிடைத்தது. அந்த வகையில் சில அகதிகளை திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்தக் கூடியதாக அமைந்தது.
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் விமானத்தை முழுமையாகத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மறுத்த நீதிபதி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தஞ்சம் மறுக்கப்பட்டமைக்கான தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இருந்தும் ஏனையவர்கள் 25 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.