தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு
ஆளான சிறுமி மலாலாவின் பெயர், பள்ளிக்கு சூட்டப்படுவதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தின் மிங்கோரா நகரை
சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய்(வயது 14). பள்ளி மாணவியான மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியர். இவர் அமைதி குறித்து பல்வேறு பேச்சு போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் மலாலா மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த மலாலா, தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாள். மலாலாவின் பெயரில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றுக்கு, பாகிஸ்தான் அரசு மலாலா பெயரை சூட்டியுள்ளது. ஆனால் இதற்கு அந்த பள்ளி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இந்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தலிபான்கள் இந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்துவார்கள். பாதிக்கப்படப்போவது நாங்கள் தான் என கூறி வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர் |
வெள்ளி, 14 டிசம்பர், 2012
மலாலாவின் பெயரை சூட்ட பள்ளி மாணவிகள் எதிர்ப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக