லண்டனில் மர்மமான முறையில் தற்கொலை
செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார்
வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர். இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு கொடுத்தார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன ஜெஸிந்தா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தி ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஜெஸிந்தா, துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பணிபுரியும் சக ஊழியரும், மருத்துவமனை பாதுகாவலர்களும் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேறு எதுவும் சந்தேகப்படும் படியாக இல்லை. மூன்று குறிப்புகளை எழுதி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
வெள்ளி, 14 டிசம்பர், 2012
செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக