siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஜனாதிபதியை தோற்கடித்து வெற்றி பெறும் நிலையில்?

 
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக கோரி புரட்சிபடையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப் போராட்டத்தில் இதுவரையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதுடன், ஐந்து லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போராட்டத்தை கைவிடும் படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியும், ஜனாதிபதி பதவி விலக மறுத்து வருகிறார். இவருக்கு சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இதற்கிடையே சிரியா புரட்சிபடையினரை அங்கீகரிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சர் போக் டோனோவ் குறிப்பிடுகையில், சிரியாவில் புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் மடிவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
இந்நிலையில் புரட்சிபடையினர் மீது சிரியா இராணுவம் ஸ்கட் ரக ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது

0 comments:

கருத்துரையிடுக