19.09.2012.By.Rajah.சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு எலியின்
மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின்
வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும்
என்கின்றனர்.
இப்பணியை நிறைவேற்றாவிட்டால் மனித மூளையின் நரம்பிணைப்புகளின் வரைபடத்தில்
ஒவ்வொரு நரம்பிணைப்பின் இருப்பிடத்தைக் குறித்து அறிய நாற்பது ஐம்பதாண்டுகள் ஆகலாம்
என்று லாசேனில் உள்ள புளு ப்ரெயின் ஆய்வுத்திட்டத்தின் தலைவரான ஹென்றி மர்க்ராம்
கூறினார். கடந்த 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுத்திட்டத்தின் மூலமாக பாலூட்டி மூளை ஒன்றசை் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளை உருவாக்குவது பெரிய சவாலாக உள்ளது. இந்த இணைப்பின் மூலமாகத்தான் மின் மற்றும் வேதித் தொடர்புகள் ஏற்படுகின்றன. உயிருள்ள மூளைத் திசுவிலிருந்து 20 ஆண்டுகளாக நரம்பணுக்களை எடுத்து தொகுத்து நரம்பிணைப்புகளை உருவாக்கி அதற்கிடையே தொடர்புபடுத்தப்படும் மின் மற்றும் வேதிப் பண்புகளை ஆராய்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நரம்பணுவையும் புளு ஜீன் சூப்பர் கம்யூட்டரில் முப்பரிமாண முறையில் மீட்டமைத்தனர். சுமார் 10,000 நரம்பணுக்களை இப்போது இணைத்துள்ளனர். நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் என்ற அமைப்பு வெளியிடும் வாரப்பத்திரிகை ஒன்றில் விஞ்ஞானிகள் தமது செயற்கை நரம்பிணைப்பு வரைபடத் திட்டம் பற்றி ஆய்வுக்கட்டுறை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த நரம்பணு இணைப்பு இயற்கையான மூளையில் இருப்பதைப் போல 75 - 95 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த ஆய்வு இன்னும் விளக்கமான முறையில் நரம்பியல் அமைப்புகளில் மாதிரி வடிவத்தை (Models) உருவாக்க உதவும். |
புதன், 19 செப்டம்பர், 2012
மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)
புதன், செப்டம்பர் 19, 2012
காணொளி