Wednesday, 19 September 2012, |
By.Rajah.பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார், ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படம் மூலம் கொலிவுட்டிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். |
இப்படத்தில் இவர் கழுகு நாயகன் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நடித்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானர்கள். உடனே, மோனலை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக கூறினார். இதை அடுத்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது |
புதன், 19 செப்டம்பர், 2012
பிரபல தெலுங்கு நடிகை திடீரென மயங்கியதால் படப்பிடிப்பு இரத்து
புதன், செப்டம்பர் 19, 2012
செய்திகள்