19.09.2012.By.Rajah.காரைநகர் கசூரினா கடற்கரையில் தொடரும் கலாசார சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த
உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளால் இந்தக் கோரிக்கை
முன்வைக்கப்பட்டது. கசூரினா கடற்கரையில் கட்டு மீறிச் செல்லும் கலாசார சீரழிவுகளைக்
கட்டுப்படுத்துவதுடன் அந்தப் பகுதியில் மதுபோதையில் அட்டகாசம் புரிவோரால்
குடும்பமாகக் கசூரினா கடற்கரைக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களை
எதிர்நோக்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
பிரதேச சபையால் கசூரினாக் கடற்கரைக்கு செல்லும்
வாகனங்களுக்கு வரி அறவிட்டு உட்செல்ல அனுமதிப்பதுடன் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற
வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனால் அந்த வாகனங்கள் தனியார் காணிகளிலும்
சவுக்கு மரங்கள் நிறைந்த பகுதிகளிலும் நிறுத்தப்படுகின்றன. இந்த நிலைமை கலாசார
சீரழிவுகள் ஏற்பட வழியமைக்கின்றன என்று கூறப்பட்டது.
பிரதேச சபையால் வாகனங்களை நிறுத்தவதற்கான
தரிப்பிடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் கலாசார சீரழிவுகளை தடுக்க
ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது