19.09.2012.By.Rajah.கனடாவில் வீடுகளின் விலை
உயரவில்லை என்றாலும், விற்பனை சரிந்து விட்டதாக கனடாவின் வீட்டுமனைக் கழகம்
அறிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டு விற்பனை குறைந்து கொண்டே வந்து, தற்போது
8.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு வான்கூவர், டொரொண்டோ, கேல்கரி, எட்மண்ட்டன்
மற்றும் ஒட்டாவாவின் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு தான் காரணமாகும். மாத அடிப்படையில் ஆராய்ந்தால் யூலை மாதத்தில் மட்டும் 5.8 சதவிகிதம் குறைந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் இதுபோன்ற விற்பனைச் சரிவை இதுவரை கண்டதேயில்லை. விற்பனையில் குறைவு ஏற்பட்டாலும் விலையில் குறைவு ஏற்படவில்லை. இது கடந்தாண்டை விட 0.3% உயர்ந்துள்ளது. இன்னும் சில மாதங்கள் தகவல் சேகரித்தால் மட்டுமே கனடாவின் வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணங்களை ஆராய்ந்தறிய முடியும் என்று தலைமைப் பொருளியலாளர் கிரிகோரி க்ளம்பு கூறியுள்ளார். கனடாவின் வீட்டுமனைக் கழகம், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வீட்டு விற்பனை குறையும் என்றே எதிர்பார்க்கிறது. 2012ஆம் ஆண்டில் வீட்டு விலை சராசரியாக 365,000 டொலர் இருக்கலாம் என்றும், இது கடந்தாண்டின் சராசரி விலையை விட 0.6 சதவிகிதம் மட்டுமே அதிகம் என்றும் தெரிவித்துள்ளது |
புதன், 19 செப்டம்பர், 2012
கனடாவில் வீட்டு விற்பனை சரிவு
புதன், செப்டம்பர் 19, 2012
செய்திகள்