19.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில், காசநோய் எதிர்ப்புக்கு
மண்ணில் கிடைக்கும் நுண்ணுயிரி சரியான மருந்தாக அமைகிறது என்பதை சமீபத்தில்
விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
பைரிடோமைசின் என்ற இயற்கையான நுண்ணுயிரி, காசநோயை உருவாக்கும் மைகோ
பேக்ட்டீரியம் ட்யுபர்குளோசிஸ் என்ற நுண்ணுயிரியை அழித்துவிடுகிறது. இதனால் இந்த பைரிடோமைசினை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்றில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்தை லாசோன்சாவில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் (EPFL) பேராசிரியர் ஸ்டூவர்ட் கோல் உறுதி செய்தார். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி அரை மில்லியன் முதல் எட்டு அல்லது ஒன்பது மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் காசநோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே இந்த புதுமருந்து இவர்களுக்கு புதுவாழ்வைத் தருவது உறுதி. இந்த புதிய மருந்து பற்றி ஐரோப்பிய மாலிக்யுலர் பயாலஜி அமைப்பு (EMBO) வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது. 1953ம் ஆண்டில் ஜப்பானிய விஞ்ஞானிகள் இந்த பைரிடோமைசின் மருந்து பற்றி உலகுக்கு எடுத்துரைத்தனர். ஆனால் இதன் செயற்பாடும், நோயை குணமாக்கும் விதமும் தெளிவாக விளக்கப்படவில்லை என்று கூறி இதனை ஏற்க மருத்துவ உலகம் மறுத்துவிட்டது. இப்போது ஐரோப்பிய விஞ்ஞானிய பைரிடோமைசினைப் பயன்படுத்தலாம் என்று உறுதி செய்துள்ளனர் |
புதன், 19 செப்டம்பர், 2012
காசநோய் எதிர்ப்புக்கு புதிய மருந்து
புதன், செப்டம்பர் 19, 2012
மருத்துவ செய்திகள்