19.09.2012.jah.சுவிட்சர்லாந்தின் தொடர்வண்டிப்
போக்குவரத்துக்கான விஞ்ஞானிகளின் படைப்புத் திறனை அறிந்துக் கொள்ள அமெரிக்காவிலும்,
சுவிட்சர்லாந்திலும் இருப்பவர்கள் இணையத்தளத்தின் மூலமாக அறிந்துக் கொள்ள ஆர்வம்
காட்டி வருகின்றனர்.
ஸ்கைப் மூலமாக இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. கடந்த 1870 ல் சுவிஸ்
விஞ்ஞானியான அனட்டோலே மேலெட் என்பவர் கண்டுபிடித்த தொடர்வண்டி எந்திரத்தை இப்போது
சீசர் மேயா என்ற பொறியாளர் இயக்கினார். இந்த மேலெட் எந்திரம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய பொருள் அல்ல இன்றும் இவை நன்றாக இயங்கக்கூடிய தன்மை கொண்டது என அவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். இந்த மேலட் எந்திர நுட்பம் என்பது இரட்டை எந்திரங்களைக் கொண்டதாகும். எனவே இந்த எந்திரம் பொருத்தப்பட்ட தொடர்வண்டிகளில் அமெரிக்காவில் மரங்களை ஏற்றிச் சென்றனர். இன்றும் ரஷ்மோர் சிகரத்தின் அருகே கறுப்பு மலையின் வழியாக ஒவ்வோராண்டும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உட்பட 100,000 அமெரிக்கரை இந்தத் தொடர்வண்டி ஏற்றிச் செல்கிறது. முதல் எந்திரத்திலிருந்து இரண்டாம் எந்திரத்திற்கு நகரும் போது நீராவியை இரண்டு முறை இந்த மேலட் எந்திரம் பயன்படுத்துவதால் இன்றும் கூட இந்தத் தொடர்வண்டி சிறப்பாக ஓடுகிறது. மேலட் எந்திரத்துக்கும் வேறு இரண்டு சிறிய மோட்டார் வாகன இயந்திரத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடுகளைக் காட்டமுடியும். சிறிய எந்திரங்கள் நான்கு வண்டிகளை (கோச்) இழுக்க வல்லன. ஆனால் மேலட் எந்திரமோ ஏழு வண்டிகளை இழுக்கும் என்று சீசர் மேயர் விளக்கினார் |
புதன், 19 செப்டம்பர், 2012
சுவிஸ் தொடர்வண்டித் தொழில் நுட்பத்தை அறிய இணையத்தளத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
புதன், செப்டம்பர் 19, 2012
தொழில்நுட்பம்