siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 டிசம்பர், 2012

ஆளில்லா உளவு விமானத்தை கைப்பற்றியது??

 
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனால் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான விடயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறோம் என ஈரான் கூறிவருகிறது.
ஈரானின் பேச்சில் நம்பிக்கை இல்லாத அமெரிக்கா அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா எண்ணெய் உள்ள பகுதிகளை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கின்றது.
இந்நிலையில் தற்போது வளைகுடா பகுதியில் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்த சிறிய ரக ஆளில்லா விமானத்தை ஈரான் கடற்படை பிடித்துள்ளது.
எப்போது பிடித்தது, எவ்வாறு பிடித்தது போன்ற தகவலை ஈரான் அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், வளைகுடா பகுதியில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது போன்ற ஒரு விமானத்தை ஈரான் பிடித்து வைத்து கொண்டதும், சமீபத்தில் தங்கள் நாட்டு எல்லையில் பறந்த மற்றொரு விமானத்தை தகர்க்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது(வீடியோ இணைப்பு)

0 comments:

கருத்துரையிடுக