Saturday 20 October 22012..By.Rajah.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயாருக்கு சொந்தமான அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணியில் இலங்கையின் கடற்படை சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் இரணைதீவு பிரதேச கடற்பரப்பில் சுழியோடிகள் கறுப்புப் பெட்டியைத் தேடி வருகின்றனர்.
இந்தக் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் அதனை விசாரணைகளுக்காக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கறுப்புப் பெட்டித் தகவல்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொண்ட போர்க்குற்றச் செயல்களை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியும் என பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்னர் 48 பயணிகள் மற்றும் ஆறு சிற்பந்திகளுடன் பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
இரணை தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடற் பரப்பில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டது.
கடற்படை சுழியோடிகள் இரணைதீவு கடற்பகுதியிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் என்ஜினின் ஒரு பகுதி, இரண்டு இறக்கைகள் மற்றும் டயர்கள் ஆகியனவற்றை மீட்டுள்ளனர்.