Saturday20October2012 By.Rajah.மலாலாக்களைஉருவாக்கி விட்ட தாலிபான்கள் நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டால், தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். தொழுகையில் கலந்து கொண்ட அந்தக் குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று, குழந்தையின் அழுகைக்கே துடிக்கும் நபிகள் நாயகத்தின் வழியான இஸ்லாத்தைப் பின்பற்று கிறோம் என்று சொல்லும் தகுதியைக்கூட இழந்து விட்ட தாலிபான் அமைப்பினர், ஒரு பெண் குழந்தை மீது துப்பாக்கி சூடு நடத்தி தங்களைக் கொடூரர்கள் என்று மீண்டும் ஒரு முறை அடையாளப்படுத்தி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மலாலா யூஸுஃப் ஸயீ.
14 வயதே நிறைவடைந்த மலாலா, வடமேற்கு பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர். இவர் 11 வயதாக இருந்த போது, சுவாத் பள்ளத்தாக்கின் பழங்குடிப் பகுதிகளை தாலிபான்கள் ஆக்கிரமித்தனர். முதல் வேலையாக பெண்கள் பள்ளிகளை மூடினர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதும், மலாலா பி.பி.சி-யின் உருதுமொழி சேவைக்கு புனைப்பெயரில் தன் மனக் குமுறல்களை, 'டைரி’யாகக் கொட்டி அனுப்பி வைத்தார்.
'என் பள்ளிச் சீருடையை, என் பையை, என் பேனா பெட்டியை பார்க்கும்போதெல்லாம் என்மனம் உடைகிறது. நாளை ஆண்கள் பள்ளி திறந்திருக்கும். ஆனால், பெண் கல்விக்குத் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்’ என்று குமுறி இருந்தார்.
மலாலாவின் குமுறல்கள் ஆட்சியாளர்களை எட்டவே, சுவாத் பள்ளத்தாக்கில் இருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 'தாலிபானுக்கு எதிரான டைரி’ எழுதிய மலாலாவுக்கு தீரச் செயலுக்கான தேசியவிருது வழங்கப்பட்டது. மேலும், அவர் பெயர் சமாதானத்துக்கான சர்வதேச விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. பாகிஸ்தான் மட்டுமின்றி உலகெங்கும் 'பெண் கல்வியின் போராளி’ என்று மலாலா போற்றப்பட்டார்.
தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமான மலாலாவைப் பழிவாங்கத் துடித்தனர் தாலிபான்கள். சுவாத் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மின்கோராவில் இருந்து பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா மீது, கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மலாலாவின் தலைப்பகுதியில் குண்டு துளைத்து விட, கிட்டத்தட்ட மரணத்தின் வாசலைத் தொட்டார் மலாலா.
ராணுவ மருத்துவமனையில் மலாலாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நாளுக்குநாள் மலாலாவின் உடல் மோசமடைந்தது. அதனால், மருத்துவக் குழுவோடு மலாலா இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது அவருக்கு பர்மிங்ஹாம் நகரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இப்போது, உலகெங்கும் மசூதிகளிலும், தேவலாயங்களிலும் இன்னும் பிற வழிபாட்டுத் தலங்களிலும், மலாலா உயிர் பிழைத்து வருவதற்காக வேண்டுதல் நடத்தப்படுகிறது. தாலிபான்கள் ஒரு மலாலாவை சுட்டு, உலகெங்கும் பல கோடி மலாலாக்களை உருவாக்கி விட்டனர்.
மலாலா நிச்சயம் வருவாள். அவள் ஆசைப்படியே