சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, By.Rajjah. |
தனது விமான படையை பலப்படுத்தும்
நடவடிக்கையாக ஈராக் அரசு, அமெரிக்காவிடமிருந்து 36 போர் விமானங்களை வாங்க முடிவு
செய்துள்ளது.
இந்த போர் விமானங்கள் எப்-16 ரகத்தை சேர்ந்தவை ஆகும். முதற்கட்டமாக 18 போர்
விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஈராக் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்
ஒப்பந்தம் செய்தது. இந்த விமானங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈராக்கிற்கு வழங்கப்படும். இதன் விலை 3 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்நிலையில் தற்போது மேலும் 16 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் ஈராக் கையெழுத்திட்டது. இந்த விமானங்கள் 2018ஆம் ஆண்டு ஈராக் வந்து சேரும். இந்த தகவல்களை ஈராக் இராணுவ அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சதாவுன் அல் துலாய்மி தெரிவித்தார் |
சனி, 20 அக்டோபர், 2012
அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்குகிறது ஈராக்
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்