அமெரிக்காவில் கடத்தப்பட்ட 10 மாத பெண் குழந்தையின் சடலம், அபார்ட்மென்ட் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குடுமுலகுண்டலா கிராமத்தில் வசிப்பவர் வேலுகொண்டா. இவரது மனைவி சத்யவதி (61). இவர்களுடைய மகன்கள் சிவா, கிருஷ்ணா. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். பென்சில்வேனியா மாநிலம் கிங் ஆப் புரூசியா பகுதியில் சிவா வசிக்கிறார். இவரது மனைவி லதா. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். இருவரும் வேலைக்கு செல்வதால், இவர்களது 10 மாத பெண் குழந்தை சானி வென்னாவை பாட்டி சத்யவதி கவனித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டில் பேத்தியுடன் இருந்தார் சத்யவதி.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த 3 மர்ம ஆசாமிகள், சத்யவதியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு குழந்தையை கடத்தி சென்றனர். தகவல் அறிந்து எப்.பி.ஐ. புலனாய்வு ஏஜென்சி மற்றும் போலீசார் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் குழந்தையை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.16 லட்சம் பரிசு அளிப்பதாக வட அமெரிக்க தெலுகு சங்கத்தினரும் போலீசாரும் அறிவித்தனர். இந்நிலையில், 10 மாத பெண் குழந்தை சானி வென்னாவின் சடலம், கிங் ஆப் புரூசியாவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் பேஸ்மென்ட்டில் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பிலடெல்பியா போலீசார் கூறுகையில், பாட்டி, குழந்தை கொலை தொடர்பாக குடும்ப நண்பர் ரகுநாதன் எண்டமூரி என்பவரை கைது செய்துள்ளோம். குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம். இவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர். அமெரிக்காவில் இரட்டை கொலை நடந்துள்ளது அங்குள்ள இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது