siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 செப்டம்பர், 2012

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்காக 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா வசூல்

03.09.2012.BY.rajah.
 
யாழ். மாவட்டத்தில் கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களிடமிருந்து 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மதுவரித் திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.
அனுமதியின்றி அரச சாராயம் விற்றமை, வயது குறைந்தோருக்கு புகைபொருள் விற்றமை, சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தமை போன்ற குற்றத்துக்காக 362 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது இந்தத் தண்டம் அறவிடப்பட்டது என யாழ்.மாவட்ட மதுவரித் திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் சட்டவிரோத மதுபான உற்பத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், தீவகப் பகுதிகளில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், அரச சாராயம் பதிவு செய்யப்படாமல் விற்பனை செய்த விற்பனையாளர்கள், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் புகைபொருள் விற்பனை செய்தவர்கள், சட்டவிரோதமாக வீடுளில் வைத்து கள் விற்பனை செய்தவர்கள் என யாழ். மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களின் தேடுதல் நடவடிக்கைகளின் போது இனங்காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அரியாலை, நல்லூர், கல்வியங்காடு, ஆனைக்கோட்டை, ஐந்துசந்தி, வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களில் மதுவரித் திணைக்களத்தின் சட்டக் கோவைகளுக்கு அப்பால் மது மற்றும் சிகரெட் விற்பனைகள் அதிகம் இடம்பெறுகின்றன.
எனினும் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் இருந்து கடந்த எட்டுமாத காலப் பகுதிக்குள் 362 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த மாதம் மட்டும் 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றத்துடன் தொடர்புடைய 362 பேரும் யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என தெரிவித்தா