siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 செப்டம்பர், 2012

20 வினாடிகளில் விமானமாக மாறும் கார்

03.09.2012.BY.rajah.சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும்.
இனிமேல் அது பற்றிய கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி பயணம் செய்யலாம். இதை அமெரிக்க ஏரோ நாட்டிக்கல் பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
சாலைகளில் 4 சக்கரங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானமாக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில் பறக்கலாம்.
2 பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமானத்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம்.
பின்னர் இதை தரையிறக்கும் போது மீண்டும் காராக மாற்றலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது