03.09.2012.BY.rajah-2 வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்று தண்ணீர்ப் பாத்திரத்தினுள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
(1)மாலை 4.00 மணியளவில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் வீட்டின் வெளியே இருந்த நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தலைகீழாக வீழ்ந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
குழந்தையைக் காணவில்லை எனத் தேடிய பெற்றோர் தண்ணீர்ப் பாத்திரத்தில் குழந்தை வீழ்ந்து கிடப்பதை அறிந்து வைத்தியசாலைக்கு கொண்டு ஓடியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
தவநேசன் அகிம்சியன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது