பாகிஸ்தானில் நேற்று தொடர்ச்சியாக நடந்து குண்டுவெடிப்பு சம்பவங்களில் 115 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவெட்டாவை தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.
இங்கு தான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால், தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பில்லியர்ஸ் அரங்கொன்றில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 85 பேர் வரை கொல்லப்பட்டனர், இதனால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.
குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
வெள்ளி, 11 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக