சுவிஸ்
மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்ட்டிஸ், பெக்ஸெரோ என்ற பெயரில்
மூளைக்காய்ச்சலுக்கு ஒரு தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது.
அந்த மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து முகமை ஒப்புதல்
வழங்குகியுள்ளது. Men B (meningecoecal serogroup B) என்ற நோய் வராமலிருக்க இந்தத் தடுப்பூசியை இனிப் பயன்படுத்தலாம், என்று நோவார்ட்டிஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றியுள்ள சவ்வுப் பகுதி வீங்கிவிடும் மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்க நோவார்ட்டிஸின் Men B தடுப்பூசி உதவும். தற்போதைய மருந்துகள் வேறு பல வகை மூளைக்காய்ச்சல் வராமல் தடுத்தாலும் இந்த மூளையின் சவ்வுப்பகுதி வீக்கம் உண்டாகும் நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் வரவில்லை. இந்த Men B வியாதியைக் கடைசி நேரத்தில் தான் கண்டுபிடிக்கின்றனர் என்பதால் அதன் பின்பு மருந்து கொடுத்தும் பலன் இல்லை. 24 மணி நேரத்துக்குள் நோயாளிகள் இறந்து விடுகின்றனர். இந்த நோய் பெரும்பாலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குகின்றது. எனவே இன்னும் மூன்று மாதத்தில் ஐரோப்பிய ஆணையம், இந்த தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி முழுக்க விற்கலாம் என்ற முடிவை எடுக்கும். இப்போது உலகமெங்கும் 1.2 மில்லியன் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். ஐரோப்பாவில் மட்டும் ஏழாயிரம் பேர் இந்நோய்ப் பாதிப்புக்கு ஆளாகினர். 13 வகையான மெனிஞ்சோகோக்கல் வியாதிகளில் ஐரோப்பாவில் மென் B எனப்படும் நோய் வகையே அதிகம் காணப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பு 3406 முதல் 4819 பேர் இந்த Men B நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிவித்துள்ளது. |
திங்கள், 19 நவம்பர், 2012
மூளைக்காய்ச்சல் தடுப்பூசிக்கு நோவார்ட்டிஸ் ஒப்புதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக