இளம்
பெண்ணின் கழுத்தில் வெடிகுண்டை வைத்து 10 மணி நேரமாக அச்சுறுத்திய நபருக்கு,
அவுஸ்திரேலிய நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் டக்ளஸ் பீட்டர்ஸ். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்
மெடிலீன் புல்வர்(வயது 18) என்ற பெண்ணின் கழுத்தில், போலி வெடிகுண்டை வைத்து,
வெடிக்க செய்வதாக 10 மணி நேரமாக மிரட்டியுள்ளார். உடனே விரைந்து சென்ற பொலிசார், அப்பெண்ணை மீட்டதுடன் டக்ளஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் பெண்ணின் கழுத்தில் போலி வெடிகுண்டை மாட்டி அவரை மிரட்டியதை ஒப்புக்கொண்டார். மனைவி விவாகரத்து செய்ததால் மன வருத்தத்தில் இருந்த அதிகப்படியாக மது அருந்தி உள்ளார். இதன் காரணமாகவே இந்த தவறை செய்ததாக அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர். டக்ளசின் இந்த நடவடிக்கையால் மெடிலீன் எந்த அளவு பயந்திருப்பார் என்பதை எங்களால் உணர முடிகிறது. எனவே டக்ளஸ் மீது கருணை காட்டமுடியாது என கூறிய நீதிபதி அவருக்கு பதிமூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் 10 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வரமுடியாத படி தீர்ப்பு கூறியுள்ளார். |
புதன், 21 நவம்பர், 2012
கழுத்தில் வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய நபர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக