siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பு தகவல்.




ஜப்பானில், நேற்று, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்கட்சியான, ஜனநாயக விடுதலை கட்சி, பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்றுள்ளதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.ஜப்பானில், 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, ஜனநாயக விடுதலை கட்சி, 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து ஜப்பானிய ஜனநாயக கட்சி, ஆட்சியை பிடித்தது.அணு சக்தி நிலையங்களை மூடுதல், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால், எதிர்க்கட்சியினர், தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனால், ஆளும் கூட்டணியிலும் பிரச்னை ஏற்பட்டது.

இதே ஆட்சியில், இதுவரை, ஆறு பிரதமர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.நாளுக்கு நாள் பிரச்னை வலுத்து வந்ததால், ஜப்பான் பிரதமர் யோஷி ஹிகோ நோடா, பார்லிமென்ட்டை, கடந்த மாதம், கலைத்தார்.இதையடுத்து, 480 இடங்களுக்கான, பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. நேற்று மதியம் வரை, 27 சதவீதத்துக்கு அதிகமான, ஓட்டுகள் பதிவாயின.
எதிர்கட்சியான ஜனநாயக விடுதலை கட்சிக்கு, அமோக வெற்றி வாய்ப்பு இருப்பதாக,கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே, புதிய ஆட்சியை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்

0 comments:

கருத்துரையிடுக