siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

விமானநிலையம் கட்டுவதை எதிர்த்து நில ஆக்கிரமிப்பாளர்கள்?

மேற்கு பிரான்சில் நாண்ட்டேஸ் அருகில் நாட்டர் டேம் டெஸ் லாண்டெஸில் புதிய விமானநிலையம் கட்டுவதை எதிர்த்து நில ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்த போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உண்டாகி இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விமானநிலையக் கட்டுமானத்திட்டம் ஆளுங்கட்சிக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்திவிட்டது.
பிரதமர் ஜீன் மார்க் அய்ரால்ட் இந்த நாண்டேஸின் முன்னாள் மேயரும் ஆவார்.
அவர் இந்த விமானநிலையத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும் பசுமைக்கட்சியினர் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் விமானநிலையம் கட்டுமிடத்தில் உள்ள சாலை ஒன்றின் நடுவில் கூடிக் கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும் நில ஆக்கிரமிப்பாளரும், விவசாயிகளும் இத்திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

0 comments:

கருத்துரையிடுக