கனடாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் உள்ள 6 வயது சிறுமி Ana Marquez-Greene என்பவர் அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூடு சம்பத்தில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
கனடாவில் உள்ள University of Manitoba என்ற இடத்தில் பணிபுரிந்த Jimmy Greene என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிற்கு பணிமாற்றம் காரணமாக குடிபெயர்ந்தார். அவர் தன் இரண்டு குழந்தைகளை சமீபத்தில் துப்பாக்கி சூடு நடந்த Sandy Hook Elementary பள்ளியில் சேர்த்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பத்தில், இவருடை 6 வயது மகள் Ana Marquez-Greene பலியானார் என்ற சோகச்செய்தி கனடிய ஊடகங்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது. பலியான Ana Marquez-Greene சகோதரரும் இதே பள்ளியில்தான் படித்து வருகிறார். ஆனால் அவருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.
திங்கள், 17 டிசம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக